தந்தை உடனான உறவை முறித்து கொள்ள விரும்பும் எலான் மஸ்க் மகள்..!!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜெனிஃபர் ஜஸ்டின் வில்சனை திருமணம் செய்தார். இவர்களின் திருமண வாழ்வு 2008-ம் ஆண்டுக்கு முடிவுக்கு வந்தது.

musk

இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவர்களில் ஒருவர் மகன் சேவியர் அலெக்ஸாண்டர் மஸ்க் (18), ஒரு கட்டத்தில் தான் திருநங்கை என்பதை புரிந்து கொண்டதும், தனது பெயரையும் பாலினத்தையும் மாற்ற மனுதாக்கல் செய்துள்ளார். அமெரிக்க அரசின் சட்டத்தின்படி ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகி இருந்தால் பெயர், பாலினத்தை மாற்றி கொள்ளலாம்.

அந்த வகையில் அலெக்சாண்டர் மஸ்க் தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடிய மறுநாளே தனது பெயரை விவியன் ஜென்னா வில்ஸன் என மாற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

musk-exwife

தந்தை எலான் மஸ்க் சார்ந்த எதுவும் பெயரளவில் கூட தன்னை பின் தொடரக் கூடாது என விவியன் கூறியுள்ளார். அதே நேரத்தில் எலான் மஸ்க்கிற்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட உறவு முறிவு குறித்த விளக்கம் இல்லை.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.