திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் சத்துணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வயிற்று வலி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கம் அருகே உள்ள படி அக்ரகாரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் 61 மாணவ மாணவிகளுக்கு காலையில் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மதியம் சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 43 மாணவ மாணவிகளுக்கு தலை சுற்றல் வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப நிலைமாணவ மாணவிகளுக்கு தலை சுற்றல் வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.