திருவள்ளூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த மடவிளாகம் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் உமா சங்கர்(21).
இவர் நசரத்பேட்டையில் உள்ள தனது நண்பரான விஜயுடன் நேற்று கல்லூரிக்கு சென்று மாற்று சான்றிதழ் விண்ணப்பித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உமாசங்கர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த விஜயை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.