ஆகஸ்ட்-டிசம்பர் வரையிலான மாதங்களில் பாடசாலை விடுமுறைகளை குறைப்பதற்கும், மேலதிக பாடசாலை நாட்களை உள்ளடக்கி பாடசாலை பாடத்திட்ட கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சு செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கான சிறப்புக் கல்வித் திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளையில் பாடசாலை ஆசிரியர்கள், உயர்தர ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பாடத்திட்டத்திற்கு அமைய பயிற்சிகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நகரங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் மாணவர்களின் வருகை 70-80 சதவீதம் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.