பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளை, இடி மின்னலுடன் புயல்கள் தாக்க உள்ள நிலையில், ’உயிருக்கு ஆபத்து’ எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம்.
இன்று பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளை, இடி மின்னலுடன் புயல்கள் தாக்க உள்ளதாக வானிலை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்களும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடுகளும் அலுவலகங்களும் வெள்ளத்தாலும், மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுகளாலும் சேதப்படுத்தப்படும் அபாயம் சிறிது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேகமாக பாயும் அல்லது ஆழமான பெருவெள்ளத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் சிறிதளவு உள்ளது என்றும், குறிப்பாக எந்த இடத்தை புயல்கள் தாக்கும் என கணிப்பது கடினம் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்காணித்து, அது குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.