பிரேசில் நாட்டில் அழகி பட்டம் வென்ற 27 வயது இளம்பெண், டான்சில அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் உபாதைகளால் உயிரிழந்தார்.
2018ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் பட்டம் வென்ற கிளெய்சி கொரெய்யா சில மாதங்களுக்கு முன் டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளெய்சிக்கு ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்த கிளெய்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.