ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் எப்போதும் அணுஆயுதப் பெட்டியை சுமந்து செல்லும் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் ஓய்வுப்பெற்ற கர்னல் வாடிம் ஜிமின், அவரது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணுஆயுதப் பெட்டியை அவருடம் எப்போதும் சுமந்து செல்லும் ஓய்வுப்பெற்ற கர்னல் வாடிம் ஜிமின்(53) Vadim Zimin, மாஸ்கோவின் கிராஸ்னோகோர்ஸ்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது குளியலறையில் இருந்தாக கூறப்படும் அவரது சகோதரரால் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வாடிம் ஜிமின் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
‼️Former Putin bodyguard who carried his nuclear briefcase tried to commit suicide
A 53-years-old Vadim Zimin, retired colonel in the Federal Security Service, who had been in charge of the “nuclear briefcase” was found in his house with a gunshot wound.https://t.co/75o7s6rxUc
— NEXTA (@nexta_tv) June 23, 2022
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாடிம் ஜிமின் மிகவும் மோசமான உடல்நிலையுடன் தீவிர சிகிச்சையில் பிரிவில் கண்கானிக்கப்பட்டு வருகிறார்.
மேலும் வாடிம் ஜிமின் சுங்கச் சேவையின் மூத்த அதிகாரியாக சேர்ந்த பிறகு லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வரும் இந்தநிலையில், அவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் தற்போது குற்றவழக்கு காரணமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: 89 வயது பாட்டியை சொந்த பேரனே குத்திக் கொன்ற துயரம்: பிரித்தானியாவில் பரபரப்பு!
இவர் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சினின் உதவியாளராக பணியாற்றிய நிலையில், ஜனாதிபதி புடினின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு கர்னலாக செயல்பட்டார்.