இன்று காலை நாட்டுக்கு வரவிருந்த 40,000 மெற்றிக்தொன் 92 ஒக்டேன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வருவது தாமதமாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
பெற்றோல் ஏற்றிய கப்பல் வருவதற்கு ஒரு நாள் தாமதமாகும் என்பதனால், இன்றும் நாளையும் குறிப்பிட்ட அளவு பெற்றோல் மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டோ டீசல் விநியோகம் வழமை போன்று விநியோகிக்கப்படும் என்றும் சுப்பர் டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.