சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் பொதுக்குழுவை எதிர்ப்பதாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தெரிவித்துவிட்டு பாதியிலேயே பொதுக்குழு கூட்டத்தைவிட்டு கிளம்பிச் சென்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இப்போது விறுவிறுப்பக்க நடந்து முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர வேண்டிய தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தார் . இந்த தீர்மானத்தை ஜெயக்குமார் வழிமொழிந்தார்.
இதையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முன்னதாக இந்த அறிவிப்பின் போது அவர் மீது மாலை போட வந்த நிர்வாகிகளை.. இருங்கப்பா .. நீங்க வேற.. பேச விடுங்க என்று கோபமாக எடப்பாடி பழனிசாமி கடுப்படித்தார். இதையடுத்து அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ஒற்றை தீர்மானத்துடன் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கேபி முனுசாமி அறிவித்தார்.
மேலும் அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜீலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மேடையிலிருந்து எழுந்த வைத்தியலிங்கம் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் பொதுக்குழுவை எதிர்ப்பதாக கூறிவிட்டு, மேடையிலிருந்து இறங்கினார், அவருடன் ஓபிஎஸ்-வும் இறங்கிச் சென்றார். இவரும் பாதியிலேயே கிளம்பிச் சென்றனர்.