போலி வீசா மற்றும் கடவுச்சீட்டுடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நெடுங்கேணியைச் சேர்ந்த 32 வயதுடையவர்.
டோகா கட்டரின் ஊடாக ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முற்பட்ட வேளையில், விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.