மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு 82 மில்லியன் டொலர்

வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ,மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு 82 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற சுகாதாரத்துறை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்  இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,மருந்து மற்றும் மருந்து தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் 260 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை ஊழியர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுகின்றன. இதனால் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் சுகாதாரத் துறை ஊழியர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகதார அமைச்சர்  தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காலத்தில் சுகாதாரத் துறையினர் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும். இக்காலப்பகுதியில் வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உரிய வகையில் கொள்வனவு செய்து அவற்றை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்தினால் முடிந்தது  மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்

கடந்த சில வாரங்களில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியபோதும் சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்று தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
நாட்டில் தற்போது நிலவும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஆகியவற்றை முகாமைத்துவம் செய்வதற்கும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண

நாட்டிற்குத் தேவையான மருந்துகளில் ஏராளமானவற்றை உள்ளுரில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.