மாலத்தீவில் பரபரப்பு..!! சர்வதேச யோகா நிகழ்ச்சியில் புகுந்து தாக்குதல்!!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.

yoga

அந்த வகையில், மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இன்று காலை 6 மணிக்கு அங்குள்ள கலோலு விளையாட்டு அரங்கில் யோகா நிகழ்வு நடைபெற்றது.

அப்போது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர் சிலர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கு யோகாவில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர். குறைந்த அளவு எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால் கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் ராணுவம் வரவழைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி முனு மஹாவர், மாலத்தீவு இளைஞர் நலத் துறை அமைச்சர் அகமது மகலூப், இந்திய கலாச்சார அமைப்பின் நிர்வாகி தன்சீர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.