மீண்டும் வரலாற்று சரிவில் முடிந்த ரூபாய் மதிப்பு..!

இன்று பங்குச்சந்தை அதிகப்படியான ஏற்ற இறக்கத்துடன் இயங்கி வந்த நிலையில் வர்த்தகம் முடியும் போது சென்செக்ஸ் குறியீடு 443.19 புள்ளிகள் சரிந்து 52,265.72 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 143.35 புள்ளிகள் உயர்ந்து 15,556.65 புள்ளிகளை அடைந்தது.

ஆனால் இதேவேளையில் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாற்றுச் சரிவை எட்டியது.

ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.14,000 கோடி: அந்நிய முதலீடுகள் வெளியேற்றத்தால் தடுமாறும் பங்குச்சந்தை!

இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு

வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதாவது ஜூன் 23ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78.32 என்ற வரலாற்றுச் சரிவான அளவீட்டைத் தொட்டது. இது பொருளாதார மந்தநிலை அச்சத்தால் உலக நாடுகள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வரும் காரணத்தால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

புதன்கிழமை நிலை

புதன்கிழமை நிலை

இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் ரூபாய் மதிப்பு 78.26ல் துவங்கி, அதன் வரலாறு காணாத 78.32ல் நிலைபெற்றது. புதனன்று, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 19 பைசாக்கள் சரிந்து 78.32 என்ற வரலாறு காணாத அளவில் வந்தது, இதன் மூலம் முந்தைய முடிவில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ரூபாய் மதிப்பு நிலைப்பெற்றுள்ளது.

பெடரல் ரிசர்வ்
 

பெடரல் ரிசர்வ்

அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், நாங்கள் பணிநீக்கத்தைக் குறைக்கப் பொருளாதார மந்தநிலையை இன்ஜினியர் செய்யவில்லை, அதேவேளையில் பொருளாதாரச் சரிவை சமாளிக்கப் பொருட்களின் விலையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பவல்

ஜெரோம் பவல்

ஜெரோம் பவல் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் ஆசிய சந்தையில் வளர்ச்சி அடைந்துள்ளதைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையும் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

அதேவேளையில் கச்சா எண்ணெய் விலை இன்று சரிந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் காப்பாற்றியுள்ளது. WTI கச்சா எண்ணெய் விலை 0.40 சதவீதம் சரிந்து 105.8 டாலராகச் சரிந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.25 சதவீதம் சரிந்து 111.5 டாலராகச் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rupee Ends At All-Time Low Of 78.32 on june 23

Rupee Ends At All-Time Low Of 78.32 on june 23 மீண்டும் வரலாற்றுச் சரிவில் முடிந்த ரூபாய் மதிப்பு..!

Story first published: Thursday, June 23, 2022, 17:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.