மும்பை : மகாராஷ்டிரா அரசியலில் நடக்கும் குழப்பங்களுக்கு இடையே முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு இல்லத்தை காலி செய்து சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார் என்று நேற்று உத்தவ் அறிவித்து இருந்தார்.