உக்ரைனில் குண்டுகளை புதைத்துவிட்டு, ரஷ்ய துருப்புகள் காத்திருந்த நிலையில், ஆடு ஒன்றால் அவர்களின் திட்டம் சுக்கலாக நொறுங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில் குண்டு வெடித்து பல எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் Zaporizhzhia பிராந்தியத்தில் அமைந்துள்ள Kinski Rozdory கிராமத்திலேயே ஆடு ஒன்று ரஷ்ய துருப்புகளுக்கு மரண பயத்தை காட்டியுள்ளது.
ரஷ்ய துருப்புகள் ஒரு உள்ளூர் மருத்துவமனை அருகே கையெறி குண்டுகளை புதைத்து அதை டிரிப்வயர்களால் இணைத்து பொறி வைத்துள்ளனர்.
மேலும், உக்ரைன் துருப்புகளுக்காக பொறிவைத்து காத்திருந்த நிலையில், திடீரென்று அருகிலுள்ள பண்ணையிலிருந்து தப்பிய ஆடு ஒன்று மருத்துவமனையை நோக்கி அலைந்து திரிந்து டிரிப்வயரை சேதப்படுத்தியுள்ளது.
இதில் வசமாக சிக்கிக்கொண்ட ரஷ்ய வீரர்கள் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர். ஆனால் அந்த ஆடு அதன் பின்னர் என்ன ஆனது என்பது தொடர்பில் தகவல் இல்லை என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கொடூர திட்டங்களை முறியடித்து, நாட்டு மக்களை காப்பாற்ற மேற்கத்திய நாடுகள் கனரக ஆயுதங்களை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
நாம் நமது நிலத்தை விடுவித்து வெற்றியை அடைய வேண்டும், ஆனால் மிக விரைவாக, மிக மிக விரைவாக அது நடக்க வேண்டும் என ஜெலென்ஸ்கி வியாழக்கிழமை வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.