வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையா – சின்மயி பதில்

பிரபல பின்னணி பாடகி சின்மயி. கடந்த 2014ல் நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக கூறி குழந்தையின் விரலை பிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார் சின்மயி. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

ஒரு சிலர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்ததா என கேள்வி எழுப்பினர். இதற்கு, ‛‛நான் கர்ப்பமாக இருந்த போட்டோவை வெளியிடாததால் இப்படி கேள்வி எழுப்பினர். என்னிடம் கேட்கும் இந்த நபர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன். என் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனது குடும்பம், நண்பர்களால் நான் என்று பாதுகாக்கப்படுவேன். ஆபரேஷன் சமயத்தில் குழந்தைகள் இந்த உலகில் வந்தபோது பஜனை பாடினேன்'' என தெரிவித்துள்ளார் சின்மயி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.