ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கெளதம் அதானிக்கு நாளை 60வது பிறந்த நாள் ஆகும். இதற்கிடையில் கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு சமூகப் பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கார்பஸ் தொகையினை அதானி அறக்கட்டளையானது நிர்வகிக்கும் என்றும் அதானி குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கெளதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவாகும்.
ஜூலை 1ல் இருந்து ரூ.3000 வரை அதிகம் கொடுக்கணும்.. ஏன்.. ஹீரோ மோட்டோகார்ப் சொல்வதென்ன?
சமூக சேவைக்காக பெரும் அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான கெளதம் அதானி, ஃபேஸ்புக்கின் அதிபர் மார்க் ஜுக்கர்பெர்க், வாரன் பஃபெட் உள்ளிட்ட பில்லியனர்கள் வரிசையில் இணைகிறார். நாளை 60 வயதை தொடவிருக்கும் அதானி பெரும்பகுதியை சமூக சேவைக்காக அர்பணித்துள்ளார். ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் அதானியின் நிகர மதிப்பு 95 பில்லியன் டாலராகும்.
மகிழ்ச்சியடைகிறேன்
சமூக பாதுகாப்பு சேவைகளுக்காக அதானி நன்கொடையாக அளிப்பதாக அதானி ட்விட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளார். எங்கள் தந்தையின் 100வது பிறந்த நாள், எனது அதானியின் 60வது பிறந்த நாளில், அதானி குடும்பம் இந்தியா முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 60,000 கோடி ரூபாயினை கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் நெகிழ்ச்சி
இது இந்திய மக்களின் வளர்ச்சிக்காக பயன்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்ல, தான் பள்ளிக் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோகளையும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நன்கொடையானது ஹெல்த்கேர், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தும்.
போட்டியை அதிகப்படுத்தும்
அதானி அறக்கட்டளை மேற்கண்ட துறைகளில் கவனம் செலுத்துவதோடு, இந்த சவால்களை எதிர்கொள்வது நமது எதிர்கால பணியாளர்களின் திறமை மற்றும் போட்டித்தன்மையை கணிசமாக மேம்படுத்தும். இதுவே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது மகிழ்ச்சியினை இன்னும் அதிகரிக்கும் விதமாக எனது தந்தையின் 100வது பிறந்த நாள் ஆகும். அதோடு எனது 60வது பிறந்த நாள் ஆகும். குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதாரம்,கல்வி, திறன் மற்றும் மேம்பாடு தொடர்பான தொண்டு நடவடிக்கைகளுக்கு 60,000 கோடி ரூபாய் என அதானி குழுமத்தின் தலைவர் கூறியுள்ளார்.
Gautam Adani announces Rs 60,000 crore for Social Welfare Foundation on his 60th birthday
Tomorrow is the 60th birthday of Gautam Adani, Asia’s richest man. Meanwhile, Gautam Adani and his family have donated Rs 60,000 crore for various social causes.