அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த 9 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனித் தனியே தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.
இன்று நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு நடத்தக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அளித்த ஓபிஎஸ், எந்த பதிலும் இல்லை என்பதால் ஆவடி காவல் ஆணையரிடம் பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனு அளித்தார். ஆனால் காவல்நிலையம் இந்த மனுவை ஏற்கவில்லை நிராகரித்துவிட்டது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காவல்துறை தடைவிதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. மேலும் ஓபிஎஸ்-யின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழசாமி பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்தனர். இதனால் ஓபிஎஸ்-க்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி, சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க முடியாது என்றும், பொதுக்குழுவில் அ.தி.மு.க சட்ட விதிகளை திருத்த தடை இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது மேலும் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பொதுக்குழு வானகரத்தில் கட்டும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ் வாகன நெரிசலில் சிக்கியுள்ளது. ஓபிஎஸ் வாகனம் திருமங்கலம் வழியே செல்ல திட்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது
அதிமுக பொதுக்குழுவில் போலி பாஸ்களுடன் பலர் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2,500 பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக தகவல் போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம்
வருகைப் பதிவேட்டில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கையெழுத்திடவில்லை. பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறை வருகை பதிவேடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள போதும், எந்த உறுப்பினரும் கையெழுத்திடவில்லை எனத் தகவல்.
அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அதிமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வாகனங்கள் தொடர்ந்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
இபிஎஸ்-க்கு ஆதரவாக ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்கு தீ வைப்பு எனத் தகவல். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது
நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100% கடைபிடிக்கப்படும். நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பொதுக்குழு கூட்டத்தில் நடக்க உள்ளதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது என்றும் அஜெண்டாவில் இல்லாதவற்றை கூட்டத்தில் விவாதிக்கலாம் ஆனால் தீர்மானமாக நிறைவேற்ற முடியாது என்று மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற தடை என்று அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி – அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத்