ITR: தாக்கல் செய்யக் கடைசி நாள் இதுதான்.. ஈசியாக தாக்கல் செய்ய இதை பாலோ பண்ணுங்க..!

ஒவ்வொரு வருடமும் மாத சம்பளக்காரர்கள் முதல் பெரும் முதலாளிகள் வரையில் தங்களது கடமையாற்ற வேண்டிய காலம் வந்து விட்டது.

ஆம், ஒருபக்கம் 2022-23ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி திட்டமிடல் பணிகள் முக்கியமானதாக விளங்கும் நிலையில், மறுபக்கம் 2021-22ஆம் நிதியாண்டு அதாவது 2022-23 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

2022-23 ஆம் கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் அறிக்கையைத் தாக்கல் செய்யக் கடைசி நாள் எப்போது தெரியுமா..?!

ரூ.25,000 வாங்கினாலே வரி கட்டணும்: மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு!

ITR தாக்கல் கடைசி நாள்

ITR தாக்கல் கடைசி நாள்

நடப்பு கணக்கீடு ஆண்டு (AY) 2022-23 க்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான சேவைகளை வருமான வரித் தளத்தில் துவங்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்யப் போதுமான ஆவணங்களைத் தயார் செய்துள்ள அனைவருக்கும் இப்போதே தாக்கல் செய்ய முடியும். அதேபோல் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 ஆகும்.

வருமான வரித் துறை

வருமான வரித் துறை

வரி செலுத்துவோர் வருமானத்தைத் தாக்கல் செய்ய incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். “AY 2022-23 க்கான ஐடிஆர் தாக்கல் இ-ஃபைலிங் போர்ட்டலில் கிடைக்கிறது. சமர்ப்பிக்கும் முன் உங்கள் படிவம் 26AS, AIS மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைச் சரிபார்க்கவும்” என்று வருமான வரித் துறை நேற்று ஜூன் 22 அன்று ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

I-T ரிட்டன் தாக்கல்
 

I-T ரிட்டன் தாக்கல்

ஆன்லைனில் I-T ரிட்டன் தாக்கல் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி:

  • முதலில் incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்திற்குச் செல்லவும்
  • உங்கள் பான் கார்டு எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • ‘இ-ஃபைல்’ என்பதைக் கிளிக் செய்து, 2022-23 ஐ ‘மதிப்பீட்டு ஆண்டு அல்லது கணக்கீடு ஆண்டு’ தேர்வு செய்யவும்.
  • உங்கள் ஆண்டு வருமானம், ஸ்டேடஸ் மற்றும் பிற விவரங்களைப் பொறுத்து ITR -1 அல்லது ITR-4 ஐ தேர்ந்தெடுக்கவும்.
  • ரிட்டனைத் தாக்கல் செய்வதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் முன் நிரப்பப்பட்ட தகவலைச் சரிபார்க்கவும்.
  • தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்றுவதன் மூலம் உங்கள் ITR விவரங்களைப் புதுப்பிக்க முடியும்.
  • உங்கள் விவரங்களை உறுதிசெய்து, சரிபார்த்துச் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குச் சில நிமிடங்கள் தேவைப்படும்.
  • ‘செலுத்தப்பட்ட வரிகள் மற்றும் சரிபார்ப்பு’க் கீழ் பொருத்தமான சரிபார்ப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

e-verify முறை

e-verify முறை

இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி உங்கள் ஐடிஆர்-ஐ உடனடியாக அல்லது தாக்கல் செய்த 120 நாட்களுக்குள் மின் சரிபார்த்து (e-verify) கொள்ளலாம். ஆதார் OTP, முன் சரிபார்க்கப்பட்ட வங்கிக் கணக்கு, முன் சரிபார்க்கப்பட்ட டிமேட் கணக்கு அல்லது வங்கி ஏடிஎம் மூலம் உருவாக்கப்பட்ட EVC மூலம் e-verify செய்யலாம்.

ஐடிஆர் வெரிபிகேஷ்

ஐடிஆர் வெரிபிகேஷ்

ஐடிஆர் வெரிபிகேஷ் படிவத்தை டவுன்லோடு செய்வது எப்படி?

  • Income Tax India இணையதளத்தில் உள்நுழையவும்
  • மெயின் பேஜ்-ல் ‘வியூ ரிட்டர்ன்ஸ்/ ஃபார்ம்ஸ்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் ஐடிஆர் சரிபார்ப்புத் திரையில் தோன்றும்.

தகவல் சேமிப்பு

தகவல் சேமிப்பு

ஒரு செஷனில் ஐடிஆர் தாக்கல் செய்வதை உங்களால் முடிக்க முடியாவிட்டால், உங்கள் படிவத்தின் வரைவைச் சேமிக்க வேண்டும். ஐடிஆர் இணையதளம் வரைவோலை சேமித்த நாளிலிருந்து 30 நாட்களுக்கு அல்லது நீங்கள் ரிட்டனைத் தாக்கல் செய்யும் வரை வைத்திருக்கும்.

Income Tax: உங்களுக்கு எந்த வருமான வரிப் படிவம்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ITR: Last date for ITR filing AY 2022-23 is june 31; how to file income tax returns

ITR: Last date for ITR filing AY 2022-23 is june 31; how to file income tax returns ITR: தாக்கல் செய்யக் கடைசி நாள் இதுதான்.. ஈசியாகத் தாக்கல் செய்ய இதைப் பாலோ பண்ணுங்க..!

Story first published: Thursday, June 23, 2022, 18:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.