Facebook Pay to Meta Pay: மெட்டா தனது டிஜிட்டல் பேமெண்ட் தளமான “பேஸ்புக் பே” என்ற பெயரை “மெட்டா பே” என்று மாற்றியுள்ளது. நிறுவனம் Metaverse-க்கான டிஜிட்டல் வாலட்டையும் அறிமுகம் செய்துள்ளது. மெட்டாவர்ஸ் மூலம் பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குவதற்கு நிறுவனம் எடுத்த முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இதை அறிவித்த அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் சக்கர்பெர்க், இன்று பேஸ்புக் பேயின் பெயர் மெட்டா பே என மாற்றப்பட்டுள்ளதாக பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
Jio Recharge: ரூ.200க்கும் குறைவான ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்!
இதன் மூலம் முன்பு போல் ஷாப்பிங் செய்யவும், பணப் பரிமாற்றம் செய்யவும் முடியும். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்றவற்றில் நடத்தப்படும் நிதி திரட்டும் பிரச்சாரங்களுக்கு எளிதாக நன்கொடை அளிக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
புதுப்பொலிவுடன் மெட்டா பே
பழைய வசதிகளுடன் புதிய விஷயங்களையும் சேர்த்து வருகிறோம் என்று பேஸ்புக் இதுகுறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. மெட்டாவெர்ஸ் (Metaverse) இப்போது ஒரு வேலட்டைக் கொண்டிருக்கும்.
மேலும், இது பாதுகாப்பாக அடையாளம் காணவும், பணம் செலுத்தும் செயல்முறை குறித்த அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும்.
Nothing Phone (1): நத்திங் போன் (1) வாங்கலாம் – ஆனா இப்டி பண்ணா மட்டும் தான் முடியும்!
எதிர்காலத்தில், நீங்கள் வாங்கக்கூடிய பல டிஜிட்டல் பொருள்கள் மெட்டாவெர்ஸில் கிடைக்கும். டிஜிட்டல் ஆடை, கலை, வீடியோ, இசை மற்றும் பிற பொருட்கள் இதில் அடங்கும்.
இந்த பொருகளுக்கு கௌரவமும் முக்கியமானதாக இருக்கும். இதற்கு Metaverse Wallet பயனுள்ளதாக இருக்கும். மெட்டாவெர்ஸில் இல் உள்நுழைவதன் மூலம், நீங்கள் எதையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.
படைப்பாளர்களுக்கு புதிய வசதிகள்
இந்த வகையான இயங்குதன்மை மக்களுக்கு சிறந்த அனுபவங்களையும் படைப்பாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்கும். டிஜிட்டல் பொருள்கள் ஒரே இடத்தில் எளிதாகக் கிடைக்கும் பட்சத்தில், படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்க முடியும் என்று மெட்டா நம்புகிறது.
Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!
இதற்கிடையில், மே மாதத்திற்கு முன்னதாக, பேஸ்புக் பே சேவைக்கு மெட்டா பிராண்டிங் பயன்படுத்தப்படுவதாகவும், விரைவில் மெட்டா பே என பெயர் மாற்றப்படும் என்றும் நிறுவனம் அறிவித்தது.
பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய பயன்பாட்டு சூழல் அமைப்பில் வேலை செய்ய, பேஸ்புக் அதன் சொந்த கட்டண செயல்முறையை நவம்பர் 2019-இல் தொடங்கியது. நிறுவனம் அதை பேஸ்புக் பே என்று அழைத்திருந்தது. அதுவே, தற்போது பெயர் மருவலைச் சந்தித்துள்ளது.