அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக எடையுடன் கூடிய ராட்சத பர்மீஸ் மலைப்பாம்பு கண்டறியப்பட்டுள்ளது.
அந்த பெண் மலைப்பாம்பு 98 கிலோ எடையும், 5 மீட்டர் நீளமும் கொண்டிருந்ததுடன், அதனுடன் 122 முட்டைகள் இருந்துள்ளன.
வெஸ்டர்ன் எவர்கிளாட்ஸ் பகுதியில் டியோன் எனப்படும் பாம்பின் மீது ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தி மலைப்பாம்புகளின் நகர்வுகள், இனப்பெருக்க முறைகள், வாழ்விடத்தை கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்டதில், இந்த ராட்சத பர்மீஸ் மலைப்பாம்பு குறித்து உயிரியலாளர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த மலைப்பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்று அதனை மரக்கட்டைகள் உதவியுடன் டிரக்கில் ஏற்றி அவர்கள் பாம்புகள் பாதுகாப்பு மையத்திற்கு எடுத்துச்சென்றனர்.