அக்னிபாதை திட்டத்தில் கடற்படை, விமானப்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. ஜூலை 5ம் தேதி வரை கால அவகாசம்!!

டெல்லி : அக்னிபாதை திட்டத்தின் கீழ் டற்படை, விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது.முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 13ம் தேதி அறிவித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம். இவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். இத்திட்டத்தால் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர். இதனால், அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.இந்நிலையில் விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு அக்னி பாதை திட்டத்தின் கீழ் இன்று தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் IAF-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான indianairforce.nic.in, agnipathvayu.cdac.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அக்னிபாதை திட்டத்தின் முக்கிய தேதிகள்!! IAF அக்னிபாதை திட்ட அறிவிப்பு.. 20 ஜூன் 2022 IAF அக்னிபாதை திட்டம் பதிவு தொடங்கும் தேதி… 24 ஜூன் 2022 IAF அக்னிபாதை திட்டம் பதிவுக்கான கடைசி தேதி… 05 ஜூலை 2022 IAF அக்னிபாதை திட்டத் தேர்வு தேதி… 25 ஜூலை 2022 IAF அக்னிபாதை திட்டம் PSL தேதி.. 01 டிசம்பர் 2022 IAF அக்னிபாதை திட்டத்தில் சேரும் தேதி… 11 டிசம்பர் 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.