புதுச்சேரி: “அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் வரும் 27-ம் தேதி உண்ணாவிரதத் போராட்டம் நடத்த வேண்டும்” என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. அக்னி பாதை திட்டத்தைக் கண்டித்து டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமை புதுச்சேரியின் அனைத்து தொகுதியிலும் வரும் 27-ம் தேதி காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, புதுவை மாநிலத்தில் அனைத்து தொகுதியிலும் வரும் 27-ம் தேதி 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.