டெல்லி ரோகிணி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.
பூத் கலான் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் இயங்கிய ஷூ தயாரிப்பு மற்றும் குடோனில் தீப்பற்றியது. தகவல் அறிந்து வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடியிருப்புகளில் தீக்காயங்களுடன் சிக்கிக் கொண்ட 8 பேர் மீட்கப்பட்ட நுலையில், உடல் கருகிய நிலையில் இளைஞரின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.