சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகின என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 1.12.2021ல் செய்யப்பட்ட சட்டவிதி திருத்தங்களுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் பதவிகள் காலாவதியாகின. காலாவதியானதால் ஓ.பி.எஸ். பொருளாளர், ஈ.பி.எஸ். தலைமைநிலைய செயலாளராக தொடர்வர் என சி.வி.சண்முகம் தெரிவித்தார்.