அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா நிறைவேற்றம்!

அமெரிக்க நாடாளுமன்ற சென்ட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கி உள்ளது. இதனால் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த மர்ம நபர், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குழந்தைகள் உட்பட ஆசிரியர்கள் பலியாகினர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் விரைவில் துப்பாக்கிக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும், இதற்கு ஏற்ற வகையில் விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கிக் கலாசாராத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதியதொரு சட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்து உள்ளது. இதற்கு அமெரிக்க மேல் சபையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் ஜோ பைடன் முன்மொழிந்த திருத்தங்களை விடக் குறைவு தான் என்றாலும், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மரடோனா மரணத்தில் சர்ச்சை… விசாரணை வளையத்துக்குள் அவரின் குடும்ப மருத்துவர்!

இதன் மூலம் 21 வயதிற்குப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வாங்கச் சென்றால் அவர்களுக்கு விரிவான சோதனை நடத்தப்படும். இந்த வார இறுதியில் முழு வடிவம் பெற இருக்கும் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.

இந்த மசோதா செனட் சபையில் நிறைவேறி உள்ள நிலையில், இதைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவில் வன்முறையை ஒழிப்பதில் இது ஒரு மகத்தான நாள் என்று ஜனநாயக கட்சியினர் குறிப்பிட்டு வருகின்றனர். அதேபோல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தங்கள் உறவுகளை இழந்தவர்களையும் இந்த மசோதாவை வரவேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.