அரிசி தவிடு-க்கு ஏகப்பட்ட டிமாண்ட்.. இதுதான் காரணமாம்..!!

உலகம் முழுவதும் ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு உணவு பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து நடுத்தர மக்களைப் பாதிப்பது மட்டும் அல்லாமல் ரீடைல் பணவீக்கத்தில் பெரும் பகுதி பங்கு வகிக்கும் உணவு பணவீக்கம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே தரையைத் தட்டும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது அரிசி தவிடு-க்கு மிகப்பெரிய அளவிலான தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

ஏன் என்பது தான், தற்போது நாட்டு மக்களின் மில்லியன் டாலர் கேள்வி..?

வேற லெவலில் இந்தியன் ரயில்வே… உலக வங்கி 5 மில்லியன் கடன் வழங்க ஒப்புதல்!

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய்

உலகளவில் சமையல் எண்ணெய் தயாரிப்பு மற்றும் விநியோகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் உலகிலேயே அதிகப்படியான அளவு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் பாமாயில் முதல் அனைத்து விதமான சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது.

இறக்குமதி வரி

இறக்குமதி வரி

இதைச் சமாளிக்க மத்திய அரசு சமையில் எண்ணெய் இறக்குமதி மீதான வரியை குறைத்துத் தற்காலிகமாக இதன் விலையைக் குறைத்தாலும், சப்ளை செயின் பாதிப்பால் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

மாற்றுத் திட்டம்

மாற்றுத் திட்டம்

இந்த நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையையும் குறைத்து, அதேபோல் தட்டுப்பாட்டையும் போக்க வேண்டும் என்பதற்காகச் சமையல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மாற்றுத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

அரிசி மில்
 

அரிசி மில்

அரிசி மில்களில் முக்கிய உற்பத்தி பொருள் அரிசியாக இருந்தாலும் அரிசி தவிடு அதிமுக்கிய துணை தயாரிப்பாக விளங்குகிறது. அரிசி தவிடு பொதுவாகவே கால்நடைகள் மற்றும் கோழி தீவனத்திற்குத் தான் அதிகளவில் பயன்படுத்தப்படும்.

அரிசி தவிடு எண்ணெய்

அரிசி தவிடு எண்ணெய்

ஆனால் கடந்த சில ஆண்டுகளில், சமையல் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் அரிசி தவிட்டில் இருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கத் தொடங்கியுள்ளன. இதை ரைஸ் பிரான்ட் ஆயில் எனச் சந்தைப்படுத்தி விற்கப்படுகிறது, இந்த எண்ணெய் ஆரோக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.

ப்ரீமியம் நிலை

ப்ரீமியம் நிலை

அதேவேளையில் மற்ற சமையல் எண்ணெய் காட்டிலும் இதன் விலை அதிகமாகவே இருந்த காரணத்தால் சிறு பகுதி மக்கள் மட்டுமே வாங்கி வந்தனர், ஆனால் தற்போது இதன் ப்ரீமியம் நிலைமை முற்றிலும் மாறியது என்று தான் சொல்ல வேண்டும்.

பாமாயில் & சூரியகாந்தி எண்ணெய்

பாமாயில் & சூரியகாந்தி எண்ணெய்

பாமாயில் ஏற்றுமதி மீதான இந்தோனேசியாவின் கட்டுப்பாடுகள் மற்றும் உக்ரேனிலிருந்து சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறுகள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட உலகளாவில் சமையல் எண்ணெய் விலைகளின் ஏற்றம் கண்டது.

விற்பனை சூடுபிடித்து உள்ளது

விற்பனை சூடுபிடித்து உள்ளது

இந்த வேளையில் அரிசி தவிடு எண்ணெய் குறையாவிட்டாலும் பிற சமையல் எண்ணெய் காட்டிலும் சிறிய அளவு குறைவாக இருக்கும் காரணத்தால் அரிசி தவிடு எண்ணெய் விற்பனை சூடுபிடித்து உள்ளது. இதனால் அரிசி தவிடு எண்ணெய் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rice Bran becomes hot commodity in India; cooking oil market in big change

Rice Bran becomes hot commodity in India; cooking oil market in big change அரிசி தவிடு-க்கு ஏகப்பட்ட டிமாண்ட்.. இதுதான் காரணமாம்..!!

Story first published: Friday, June 24, 2022, 14:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.