இந்தியாவில் முத்தமிட்டுக்கொண்ட கணவன்-மனைவி தாக்கப்பட்டது குறித்து பிரபல பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்யு நதியில் பொதுமக்கள் பலர் நீராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது நதியில் கணவன்-மனைவி முத்தமிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஆண்கள் பலர், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறீர்களே எனக்கூறி அப்பெண்ணின் கணவனை தாக்கியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இதுகுறித்து பிரபல பிண்ணனி பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், ‘இந்தியாவில் ஒரு ஆண் தன் மனைவியை முத்தமிடக் கூடாது என்று எனக்கு தெரியாது.
I didn’t know a man shouldn’t kiss his own wife in India.
Assaulting the woman and her husband.
Have we hit the lowest low yet or should we expect even worse? https://t.co/44LmUmDQhj— Chinmayi Sripaada (@Chinmayi) June 24, 2022
பெண்ணும் அவரது கணவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாம் இன்னும் மிகக் குறைந்த அளவை எட்டியிருக்கிறோமா அல்லது இன்னும் மோசமாக எதிர்பார்க்க வேண்டுமா?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.