இந்தியாவில் ரூ.4400 கோடி முதலீடு செய்யும் உலக வங்கி.. தமிழகத்தில் எவ்வளவு.. எதற்காக?

உலக வங்கியானது இந்தியாவில் மூன்றும் மாபெரும் திட்டங்களுக்காக கிட்டதட்ட 4400 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதில் குஜராத், தமிழகம் என பிரித்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது என்ன திட்டம்? எதற்க்காக உலக வங்கி முதலீடு செய்கிறது? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு… என்ன நடந்தது பேச்சுவார்த்தையில்?

மூன்று கடன் திட்டங்களுக்கு ஒப்புதல்

மூன்று கடன் திட்டங்களுக்கு ஒப்புதல்

குஜராத்தில் கல்வித் திட்டம், தமிழ் நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் தொற்று நோய்க்கு பின் மீன் வளத் துறையில் மீட்புக்கு உதவவும் மொத்தம் 562 மில்லியன் டாலர் கடனாக(இன்றைய இந்திய மதிப்பு 4393.70 கோடி ரூபாயாகும்) மூன்று திட்டங்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

குஜராத்தில் எவ்வளவு?

குஜராத்தில் எவ்வளவு?

குறிப்பாக உலக வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் குழு, குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளின் கல்வி முடிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட திட்டத்திற்கு (GOAL) 250 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

மீன் பிடித் துறை
 

மீன் பிடித் துறை

உலக வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கூடுதலான 3000 பள்ளிகளுக்கு இது பயனளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு இந்தியாவின் மீன்பிடித் துறையை மீட்டெடுப்பதற்காக 150 மில்லியன் டாலர் நிதியுதவியையும் அறிவித்துள்ளது. இது இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் துணை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழகத்தில் முதலீடு

தமிழகத்தில் முதலீடு

சமூக பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான திட்டத்திற்கு 162 மில்லியன் டாலர் நிதியுதவியும் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக அரசின் திறனை மேம்படுத்த பயன்படும் என எதிர்பர்க்கப்படுகிறது.

2020 – 21ம் ஆண்டில் மீன் வளத் துறை சுமார் 5.5 பில்லியான் டாலர் இழப்பினை கண்டது. கொரோனா தொற்று நோய் காரணமாக மீன் உற்பத்தி ஒரு வருடத்தில் கிட்டதட்ட 40% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சவால்கள்

சவால்கள்

இந்தியாவில் மீன் பிடித் துறையில் பெரிய அளவிலான தனியார் முதலீடுகள் குறைவாகவே உள்ளன. முக்கியமான நிதியளிப்பு அல்லது கடனுக்கான அணுகல் இல்லாமை மற்றும் இந்தத் துறையில் இள்ள சவால்களாக பார்க்கப்படுகிறது.

யாருக்கு பயன்

யாருக்கு பயன்

உலக வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 12 மில்லியன் மக்களை நேரடியாகவும், அதனுடன் தொடர்புடைய 13 மில்லியன் மக்கள் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளை மூலமாகவும் வேலை செய்வதாகவும் கூறியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

world bank approves Rs.4400 crore funding for 3 projects in india: How much in Tamil Nadu?

World Bank has announced that it will invest approximately Rs 4400 crore in India for three major projects.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.