கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் நேற்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, M.புதூர் பகுதியில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது.
இவ்விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, M.புதூர் பகுதியில் நேரிட்ட பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. இவ்விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்(1/2).@CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 24, 2022
தொடர்கதையாகிவரும் பட்டாசு ஆலை விபத்துகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதற்குரிய வழிமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டால் மட்டுமே இத்தகைய உயிரிழப்புகளை நிறுத்த முடியும்.” என்று டிடிவி டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.