இனிமேல் டுவிட்டரில் கதையே எழுதலாம்…. எப்படி தெரியுமா?

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரின் சிறப்பு அம்சமே அதில் 280 வார்த்தைகளை மட்டுமே எழுத வேண்டும் என்பது தான்.

கடந்த 2017 ஆம் ஆண்டு 140 சொற்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன்பின் பயனர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 280 சொற்களாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அதை 2500 சொற்களாக விரிவாக்கம் செய்யும் சோதனை முயற்சியை துவங்கி உள்ளதாகவும் இதனால் ட்விட்டர் பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ட்விட்டர்-ஐ மொத்தமாக வாங்க தயாரான எலான் மஸ்க்.. 54.20 டாலர் கடைசி ஆஃபர்.. பில்லியன் டீல்..!

ட்விட்டரின் புதிய அம்சம்

ட்விட்டரின் புதிய அம்சம்

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் தனது பயனாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை மிகச் சிறந்த அம்சங்களை பயனர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ட்விட்டரும் தனது பயனாளிகளுக்கு புதிய அம்சங்களை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

2500 சொற்கள்

2500 சொற்கள்

140 சொற்கள் மட்டுமே ட்விட்டரில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின் 280 சொற்களாக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது 2500 சொற்களாக மாற்றும் முயற்சியில் ட்விட்டர் தற்போது இறங்கியுள்ளது.

பரிசோதனை முறை
 

பரிசோதனை முறை

ட்விட்டர் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த கோரிக்கையை தற்போது ஏற்றுள்ள ட்விட்டர் அதை பரிசோதனை முறையில் சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

கனடா- இங்கிலாந்து

கனடா- இங்கிலாந்து

கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முதல் கட்டமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், பயனர்கள் இதனை பயன்படுத்தி இதில் உள்ள நிறை, குறை அம்சங்களை கூறியபின் இந்த மாற்றம் அனைத்து நாடுகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளதாகவும் ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயனர் விருப்பம்

பயனர் விருப்பம்

இந்த புதிய அம்சத்தின் மூலம் 2500 சொற்கள் பயன்படுத்தலாம் என்பதால் பயனர்கள் தங்களுடைய கருத்துக்களை விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லும் வகையில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று ட்விட்டர் கருதுகிறது. பயனர்கள் மற்றும் பார்வையாளர்களின் விருப்பத்தை முன்னிட்டு இந்த புதிய வசதியை கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் லெட்டர் ஸ்டார் அப்

நியூஸ் லெட்டர் ஸ்டார் அப்

நெதர்லாந்து நாட்டின் நியூஸ் லெட்டர் ஸ்டார் அப் என்ற நிறுவனத்தை கடந்த ஆண்டு ட்விட்டர் வாங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனத்தை வாங்கிய பின்னர்தான் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன.

போட்டி

போட்டி

ட்விட்டரில் 2500 சொற்கள் அனுமதிக்கப்படுவதால் மற்ற ப்ளாக்கிங் தளங்களுக்கு போட்டியாக ட்விட்டர் மாறும் என்று சமூக ஊடக நிபுணர் லாரா டூகுட் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இந்த வசதி அமல்படுத்தப்பட்ட உடன் பல்வேறு தளங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் டுவிட்டருக்கு தங்கள் கணக்குகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனித்தன்மை

தனித்தன்மை

டிவிட்டரின் இந்த புதிய அம்சத்தை ஏராளமானோர் வரவேற்று இருந்தாலும், ட்விட்டர் 280 சொற்கள் என்ற தனித்தன்மையை இழக்க நேரிடும் என்றும் சில ட்விட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Twitter allows 2500 words, Testing new feature

Twitter allows 2500 words: Testing new feature | இனிமேல் டுவிட்டரில் கதையே எழுதலாம்: எப்படி தெரியுமா?

Story first published: Friday, June 24, 2022, 9:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.