நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
எரிபொருளைப் பெறுவதற்குத் தேவையான சுகாதாரப் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பதிவு செய்த சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் இன்று முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
இந்த எரிபொருள் விநியோகம் தேர்ந்தெடுக்கப்பட்டு 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.