ஈரோடு மாவட்டம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு நேற்றிரவு பொருட்கள் வாங்குவது போல் சென்ற ஒருவன் உரிமையாளரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
உரிமையாளர் குல்ஜர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றவனை சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்