இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?


பொதுவாக இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சி செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயனை தரும்.

குறிப்பாக, உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும்.

அந்தவகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

  • இரவு நேரத்தில் நடந்து செல்வதால் சாப்பிட்ட உணவு எளிமையாக ஜீரணம் அடையும். இது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
  • சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் நமது மெட்டபாலிசம் மேம்பாடு அடைகிறது. 
  • நடை பயிற்சியை தொடர்ந்து உணவுகள் வேகமாக செரிமானம் அடைவதால் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால், உடல் உள் உறுப்புகளின் நலன் மேம்பாடு அடையும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்
  • தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக இதை கட்டுப்படுத்த முடியும். 15 நிமிடங்கள் அதிவேகமாக நடந்தீர்கள் என்றால் பசி உணர்வை கட்டுப்படுத்த முடியும். 
  • இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவை குறைத்து நன்றாக தூக்கம் வரும்.
  • மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருபவர் என்றால், இரவு நேரத்தில் நடப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உங்கள் உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.