ஜ்ம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜக அரசு கடந்த 2019 இல் ரத்து செய்தது. அத்துடன் யூனியன் பிரதேசமாக இருந்த இதனை ஜம்மு, காஷ்மீர் என்று இரு மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டன.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மாநிலமாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜம்மு -காஷ்மீரின் மேம்பாட்டுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதிலொரு முக்கிய அம்சமாக, அந்த மாநில மக்களுக்கு இதுநாள்வரை அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜம்மு -காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “மாநிலத்தை ஆண்ட முந்தைய அரசுகள் மின்சாரத் துறையை 11 ஆயிரம் கோடி கடனில் தள்ளிவிட்டு சென்றுள்ளன. மின்துறையை ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதன் கருத்தில் கொண்டு, சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இதுநாள்வரை காஷ்மீரிகள் அனுபவித்து வரும் இலவச மின்சார சலுகை விரைவில் ரத்து செய்யப்பட உள்ளது.
இனிமேல் மின் கட்டணம் செலுத்தவர்களின் வீடுகளுக்கு மட்டும்தான் மின்வ விநியோகம் அளிக்கப்படும்” என்று ஆளுநர் மனோஜ் சின்ஹா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.