உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் வாகனம் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும், டாடா நிறுவனமும் இணைந்து Infantry Combat Vehicles எனப்படும், போர் வாகனத்தை தயாரித்தன.
மிகவும் உயரமான மலைப் பகுதிகளிலும் செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனம், லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவத்தில் இணைக்கப்பட்டது.