பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று நேற்று (23) மதியம், எரிபொருள் இல்லாமல் இடை நின்றதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நேற்று (23) மாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயில், பேரலந்த பகுதியில் எரிபொருள் இல்லாமல் இடை நின்றதாக இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரயில்வே பொது முகாமையாளர், புகையிரதங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் ரயில்வே திணைக்களத்திடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் இல்லாமல் புகையிரதம் இடை நிற்கும் சூழ்நிலையொன்று இதுவரையிலும் உருவாகவில்லை என்றும், அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.