வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஐ.பி., உளவுப்பிரிவு தலைவராக தபன் தேகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ‘ரா’ அமைப்பு தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘ரா’ எனப்படும் வெளிநாட்டு உளவு அமைப்பின் தலைவராக சமந்த் குமார் கோயல் உள்ளார். ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பின் தலைவராக அரவிந்த் குமார் உள்ளார். இவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில், ஐ.பி.,யில் சிறப்பு இயக்குநராக இருக்கும் தபன் குமார் தேகா நியமிக்கப்படுவதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பதவியேற்ற நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ரா’ வின் தலைவராக உள்ள 1984 ம் ஆண்டு பேட்ச் பஞ்சாப் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான சமந்த் கோயலின் பதவிக்காலம் 2023 ஜூன் 30 வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
நிடி ஆயோக்கின் சிஇஓ
நிடி ஆயோக் அமைப்பின் சி.இ.ஓ., ஆக இருந்த அமிதாப் காந்தின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அந்த பதவிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பரமேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement