கர்நாடக மாநிலம் பெல்கவியில் தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு தொழிலதிபர் ஒருவர் 100 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் முதலாகி பகுதியை சேர்ந்தவர் சிவப்பா. தொழிலதிபரான இவர் தனது வீட்டில் பாதுகாப்புக்காக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த வளர்ப்பு நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடும் வகையில் 100 கிலோ கேக் தயார் செய்து பொதுமக்கள் மத்தியில் கேக் வெட்டி சிவப்பா பிறந்தநாள் கொண்டாடினார். பின்னர் 4000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM