சென்னை: கலை,அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க பெயரை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்து உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . நாளை முதல் ஜூன் 30 வரை சிறப்பு முகாம்கள் நடத்த தகுதியான மாணவிகளின் பெயர்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், கல்வி சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்ற உயர்கல்வி உத்தரவிடப்பட்டுள்ளது.