1970 மற்றும் 1980-களில் உலகையே புரட்டிப்போட்ட நோய் இளம்பிள்ளை வாதம். தீவிர மருத்துவ நடவடிக்கைகளினாலும், பரவலான தடுப்பூசி பயன்பாட்டினாலும் போலியோ தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் லண்டன் நகரின் கழிவு நீரில் தற்போது வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் நகரில் கடந்த 1984-ம் ஆண்டு கடைசியாக போலியோ தொற்று கண்டறியப்பட்டது. 2003-ம் ஆண்டு பிரிட்டன் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் நகரில் போலியோ பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரியில் வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர் அதே பகுதியில் இரு மாதங்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் மாதத்தில் போலியோவின் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.
மேலும் படிக்க | உயிரிழந்த கணவர் மூலம் 2 வருடங்கள் கழித்து குழந்தை! கணவரே பிறந்ததாக கொண்டாடும் பெண்!
இத்தனை ஆண்டுகளில் போலியோவின் அறிகுறிகளைக் கண்டறியாதது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுவரை போலியோ பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை எனவும், தடுப்பூசி செலுத்தியவர்களிடையே தொற்று பரவ வாய்ப்பு குறைவு எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு லண்டனில் உள்ள ஹில்லிங்டனில் பதின்ம வயதில் உள்ளவர்களில் 35% பேர் மட்டுமே போலியோ தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க | Monkeypox virus: குரங்கு காய்ச்சலை Pandemic என்று குறிப்பிட்ட WHN
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR