காதல் கணவனை கழட்டிவிட்டு முன்னாள் காதலனுடன் தப்பிய மனைவி: பீகாரில் நடந்த பகீர் பின்னணி!

திருமணமான, திருமணத்தை மீறிய உறவுகளுக்கிடையேயான தகராறு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான விசித்திரமான செய்திகள் தினசரி அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக காதலித்து, பெற்றோரிடம் மண்டியிட்டு திருமணம் செய்துக் கொண்ட காதல் கணவனை கைவிட்டு முன்னாள் காதலனுடன் பெண் ஒருவர் தப்பியோடியிருக்கும் சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.
பீகாரின் பாட்னாவில் உள்ள நவபட்புர் பகுதியைச் சேர்ந்த தம்பதிதான் சத்யானந்த், ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருக்கிறது.
இந்த தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்திருக்கிறார்கள். திருமண பேச்சை எடுக்கும் போது இருதரப்பு பெற்றோரும் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்க, முட்டி மோதி ஒருவழியாக கடந்த ஏப்ரல் 27ம் தேதி மணமுடித்திருக்கிறார்கள்.
ALSO READ: 
காதல் கணவனைவிட்டு காதலனுடன் தஞ்சமடைந்த காதல் மனைவி.. ஓமலூரின் காத்துவாக்குல ரெண்டு காதல்!
ஆனால் சத்யானந்துடன் அவருக்கு வீட்டுக்கு வந்த பிறகு கணவருடனான நெருக்கத்தை ராணி குமாரி குறைத்துக் கொண்டு எப்போதும் ஃபோனே கதி என இருந்திருந்திருக்கிறார்.
மேலும் இரவு நேரத்தில் தனக்கு தெரியாமல் வேறு யாருடனோ ராணி பேசி வருவதையும் கவனித்த சத்யானந்த் இது குறித்து ராணியிடம் கேட்டு சண்டையும் போட்டிருக்கிறாராம். இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், தனக்கு சத்யானந்த் உடன் வாழ விருப்பமில்லை என பகிரங்கமாக ராணி போட்டுடைத்திருக்கிறார்.
இதனையடுத்து ஒரு நாள் இரவு சத்யானந்த் தூங்கிய பிறகு திருமணத்துக்காக தனது பெற்றோர் போட்ட நகைகள், வீட்டில் இருந்த 20,000 ரூபாய் பணம் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு ராணி அவரது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்திருக்கிறார்.
ALSO READ: 
I Love You 2 நிஜமா I love you 2 : ஜார்க்கண்டில் நடந்த காத்துவாக்குல ரெண்டு காதலின் பின்னணி
இதனையறிந்த சத்யானந்த் நவ்பட்புர் காவல்நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி ராணி குமாரி பற்றி புகாரளித்திருக்கிறார். புகாரை ஏற்ற போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்களாம்.
இரண்டு ஆண்டுகளாக காதலித்து கரம்பிடித்து காதலனை விட்டு திருமணமான 45வது நாளே முன்னாள் காதலனுடம் தப்பியோடிய சம்பவம் நவ்பட்புர் பகுதி மக்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது.
ALSO READ:  
’இதற்குத்தான் ஆண்களுக்கும் ஆணையம் கேட்கிறோம்’ – கீழே விழுந்த பெண்ணால் கொந்தளித்த Netizens!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.