காஷ்மீரில் 9 ஊழல் அதிகாரிகள் டிஸ்மிஸ்

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒன்பது அரசு அதிகாரிகளை ‘டிஸ்மிஸ்’ செய்து, யூனியன் பிரதேச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜம்மு — காஷ்மீரில், வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறையில் பணியாற்றிய ஒன்பது உயரதிகாரிகள் மீது ஊழல்புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் அவர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தி, லஞ்சம், ஊழலில் ஈடுபட்டது உறுதியானது.


இதையடுத்து, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் அத்தியாவசிய பணிகள் ஒழுங்குமுறை சட்டம், பிரிவு 226 (2) ன் கீழ், எட்டு ஊழல் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்பது அதிகாரிகளையும் டிஸ்மிஸ் செய்து, யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.