ஸ்ரீநகா்,
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் உள்ள புட்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ளுா் போலீசாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்து 4 பேரை கைது செய்தனா். இவா்கள் பயங்கரவாதிகளுக்கு போதை பொருட்களை விநியோகித்து வந்துள்ளனா். பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவியும் அளித்து வந்தது விசாரணையில் தொியவந்துள்ளது.
இவா்களிடமிருந்து 3 கையெறி குண்டுகள், ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அவா்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக சதுரா போலீசாா் பல்வேறு பிாிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.