கேரளாவில் ராகுல் எம்.பி., தொகுதி அலுவலகம் மீது தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு தொகுதி காங்., எம்.பி. ராகுல் அலுவலகம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக ராகுல் உள்ளார். இன்று இவரது கட்சி அலுவலகம் மீது மர்மநபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். . இதுபற்றி காங்., டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்.எப்.ஐ.) சேர்ந்த சிலர் கொடிகளை ஏந்தியபடி அலுவலகம் நோக்கி வந்தனர்.

latest tamil news

திடீரென அலுவலகத்திற்குள் அத்துமீறி சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகிய பொருட்களை அடித்து நொறுக்கினர். அலுவலக ஊழியர்கள் சிலரையும் தாக்கினர். இதில் ஊழியர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பகுதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு குறித்து தொகுதி எம்.பி.என்ற முறையில் ராகுல் எந்த எதிர்ப்பையும் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தின் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.