கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடினர்.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது. இதனால் அடிக்கடி வன்முறையும் அங்கு வெடிக்கிறது. சமீபத்தில் அம்மாநில முதலமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை நடத்தியது. திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களுக்கு பதிலடியாக தற்போது வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகத்தை இடது சாரி அமைப்பை சார்ந்தவர்கள் சூறையாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியதாகவும், அங்கு பணிபுரிந்தவர்களை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாஃபியா போல செயல்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் வி.டி சதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM