சினிமா ரிப்போர்ட்டரை மணக்கும் ‘இரும்புத்திரை’, ’சர்தார்’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குநர் பி.எஸ். மித்ரனுக்கும், சினிமா பத்திரிக்கையாளரான ஆஷாமீரா ஐயப்பனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.

விஷால், அர்ஜூன், சமந்தா நடிப்பில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இரும்பு திரை’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ். மித்ரன். சைபர் கிரைம் குற்றங்களை கதைக்களமாக கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களுடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான ‘ஹீரோ’ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.

ஆனால், இந்தப் படம் ரசிகர்களுடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, காவல்துறை அதிகாரியாக கார்த்தி மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கி வருகிறார். இந்தப் படம் வருகிற தீபாவளி முன்னிட்டு வெளியாகிறது. இதற்கான இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

image

இந்நிலையில், பி.எஸ். மித்ரன், சினிமா பத்திரிக்கையாளரான ஆஷாமீரா ஐயப்பனை மணக்க உள்ளார். இதையயொட்டி நேற்று இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று எளிமையாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபலங்கள்பலரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பி.எஸ். மித்ரனின் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வரும்நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.