டிஎன்பிஎல் T20: சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணி வெற்றி

நெல்லை:
டிஎன்பிஎல் T20 தொடரில் சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய நெல்லை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.

185 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. இதையடுத்து நடத்தப்பட்ட ஒன் ஓவர் எலிமினேட்டரில் நெல்லை அணி வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் தொடரில் இன்று இரவு 7.15மணிக்கு நெல்லையில் நடக்க உள்ள போட்டியில் திண்டுக்கல் – திருச்சி அணிகள் மோத உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.