சன் டி.வி.யில் தினமும் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரீத்தி ஷர்மா. முன்னதாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஹீரோயின் ஜனனி தங்கையாக அனிதா கேரெக்டரில் சில மாதங்களுக்கு நடித்தார். ஜெமினி டிவியில் ஒளிபரப்பான காவ்யாஞ்சலி தெலுங்கு சீரியலிலும் ப்ரீத்தி நடித்திருந்தார்.
அழகும், குறும்பும் ததும்பும் பிரீத்தி ஷர்மாவுக்கு இப்போது சோஷியல் மீடியாவில் ஏராளமான ஆர்மிகள் உள்ளன.
இப்படி இன்று சின்னத்திரையின் இளவரசியாக ஜொலிக்கும் பிரீத்தி ஷர்மா, இந்தியாவில் டிக்டாக் செயலி இருந்தபோது நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். அதில் கிடைத்த புகழ் மூலம், தி ஹார்வெஸ்ட், எ நைட் வித் தி சஸ்பெக்ட்ஸ், தி மிரர் போன்ற பல குறும்படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல’ என்ற டெலி ஃபிலிம் மூலம் மீடியாவில் என்ட்ரி ஆனார். அப்போது பிரீத்தி 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில், ப்ளஸ் டூ படிக்கும்போது மாடலிங்கும் செய்தார்.
பிறகு கல்லூரியில் படித்தபோது, கலர்ஸ் தமிழில் வந்த `ஒரு கதை பாடட்டுமா சார்’ ஆல்பம் சீரிஸில் நடித்தார். அங்கிருந்துதான் பிரீத்திக்கு திருமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் நடிக்கும் போது, பிரீத்திக்கு 19 வயதுதான். சன் டிவியில் சித்தி 2 சீரியல் பிரீத்தி, சீரியல் கரியரில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதில் வெண்பா கேரெக்டரில் அழகும், அறிவும், அமைதியும் நிறைந்த குடும்பத்து பெண்ணாக, அன்பான மனைவியாக பிரீத்தி நடிப்பு பலரையும் கவர்ந்தது.
இப்படி சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரீத்தி ஷர்மா, வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் லக்னோ. இப்போது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் செட்டில் ஆகிவிட்டனர். பிரீத்திக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர்.
இன்று டெலிவிஷனில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரீத்திக்கு, நடிப்பு தவிர்த்து, நடனம், பாட்டு மிகவும் பிடிக்கும். பாடகியாக வேண்டும் என்பதுதான் பிரீத்தியின் கனவு. ஆனால் இப்போது டிராக் மாறி, நடிகையாகி விட்டார்.
சீரியல் மட்டுமில்லாமல், சினிமாவிலும் பிரீத்திக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கூடியவிரைவில், வெள்ளித்திரையில் பிரீத்தி ஷர்மாவை ரசிகர்கள் பார்க்கலாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“