டைடல் பார்க் முதல் தொழிற்துறை 4.0 சர்வே.. தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டம்..!

தமிழ்நாடு பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலரில் இருந்து 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர முக்கியமான இலக்கை ஸ்டாலின் அரசு கொண்டு உள்ளது.

709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..!

இந்த வேளையில் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கும், போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும் வசதியாகத் தமிழ்நாடு அரசு பல திட்டங்களை வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய புதிய முயற்சிகளின் ஒரு பகுதியாக, டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையத்தை (CoE) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதோடு விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டைடல் நியோ பூங்கா அதாவது சிறிய அளவிலான டைட்டல் பார்க் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

TIDCO - டசால்ட் சிஸ்டம்ஸ் கூட்டணி

TIDCO – டசால்ட் சிஸ்டம்ஸ் கூட்டணி

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னை டைடல் பார்க்-ல் 212 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி அமைப்பு மையத்தை அமைத்துள்ளது. இந்தியாவின் முதல் முறையாக இத்தகைய மையத்தின் மூலம் MSME துறை மற்றும் மாணவர்களுக்கு உதவும் வரையில் பிரத்யேக தகவல் தொழில்நுட்ப பொறியியல் எகோசிஸ்டத்தை உருவாகியுள்ளது தமிழ்நாடு அரசு.

இண்டஸ்ட்ரீ 4.0 மெச்சூரிட்டி சர்வே
 

இண்டஸ்ட்ரீ 4.0 மெச்சூரிட்டி சர்வே

இதோடு தமிழ்நாட்டில் இண்டஸ்ட்ரீ 4.0 மெச்சூரிட்டி சர்வே திட்டத்தை இன்போசிஸ், ஐஐடி மெட்ராஸ், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து துவக்கப்பட்டு உள்ளது. தொழில்துறை 4.0 ஆய்வு தமிழ்நாட்டில் இருக்கும் SME-கள் மற்றும் பெரிய தொழில்களின் தயார்நிலை கண்டறிய செய்யப்படுகிறது. கணக்கெடுப்பு நிறுவனங்கள் தங்கள் தொழில் 4.0 இலக்குகளை அடைவதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மதிப்பிடவும், அடையாளம் காணவும் மற்றும் மேம்படுத்தவும் உதவும்.

இன்னோவேஷன் சென்டர்

இன்னோவேஷன் சென்டர்

கோயம்புத்தூர் இன்னோவேஷன் மற்றும் பிசினஸ் இன்குபேட்டருடன் இணைந்து தொழில்துறை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கும் ₹34 கோடி செலவில் இரண்டு Industrial Innovation Centre-களைச் சிப்காட் பூங்காவில் நிறுவப்படுகின்றன.

 டைடல் நியோ பார்க்

டைடல் நியோ பார்க்

TIDEL திருப்பூர் (₹40 கோடி செலவில்) மற்றும் விழுப்புரம் (₹32 கோடி) மாவட்டங்களில் TIDEL நியோ பூங்காக்களை அமைக்கிறது. இதில் விழுப்புரம் டைடல் பூங்கா மே 2023 இல் நிறைவடையும் நிலையில், திருப்பூர் டைடல் பூங்கா மே 2023 க்குள் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu Govt Tidel Neo park to Industry 4.0 survey: Mk stalin launched a slew of initiatives

Tamilnadu Govt Tidel Neo park to Industry 4.0 survey: Mk stalin launched a slew of initiatives டைடல் பார்க் முதல் தொழிற்துறை 4.0 சர்வே.. தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.